மரக்காணம் - புதுச்சேரி இடையே நான்கு வழிச்சாலை: ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!
Union Cabinet approves construction of four lane road between Marakkanam and Puducherry
டெல்லியில் பிரதமர் மோடி தலைமைல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவையில் மரக்காணம் - புதுச்சேரி இடையே ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற இரு வழிசாலையை 04 வழிசாலையாக மேம்படுத்த ஒன்றிய அரசு மேலும் ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.2,157 கோடி செலவில் 46 கிலோ மீட்டர் நீளச்சாலையை சுங்கக் கட்டண சாலையாக அமைக்கப்படும் என அறிவிப்பட்டுள்ளது. குறித்த திட்ட சீரமைப்பு 02 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் (NH-32, NH-332) மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் (SH-136, SH-203) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய பொருளாதார, சமூக மற்றும் தளவாட முனையங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்குவதோடு, இரண்டு ரயில் நிலையங்கள் (புதுச்சேரி, சின்னபாபு சமுத்திரம்), இரண்டு விமான நிலையங்கள் (சென்னை, புதுச்சேரி) மற்றும் ஒரு சிறு துறைமுகம் (கடலூர்) ஆகியவற்றுடன் இணைப்பதன் மூலம் பல-மாதிரி ஒருங்கிணைப்பை மேம்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலேயும், இதன் மூலம், பிராந்தியத்தில் சரக்குகள் மற்றும் பயணிகளின் விரைவான இயக்கத்தை எளிதாக்குகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டம் பிராந்தியம் முழுவதும் பொருட்கள் மற்றும் பயணிகளின் இயக்கத்தை கணிசமாக துரிதப்படுத்தும் எனவும், மரக்காணம்-புதுச்சேரி பிரிவு முக்கிய மத மற்றும் வணிக மையங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புதுச்சேரியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்த திட்டம் மூலம், சுற்றியுள்ள பகுதிகளில் நிலையான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் செழிப்பை வளர்க்கும் என்று கூறப்படுகிறது.
English Summary
Union Cabinet approves construction of four lane road between Marakkanam and Puducherry