செல்லூர் ராஜூவை காரில் ஏறவிடாது தடுத்து அசிங்கப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி: இணையத்தில் வரலான அதிர்ச்சி வீடியோ..! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை 30-ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்ட அவர், கீழடியில் அகழாய்வு அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.

அதன்படி, திருப்புவனம் அருகே, கீழடிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி, தனது காரில் ஏறிய செல்லூர் ராஜூவை தடுத்து நிறுத்தி, பின்னால் வரும் வண்டியில் வரும்படி, கூறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக மடப்புரத்தில் இருந்து வந்த அவருக்கு கீழடி எல்லையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். 

அப்போது, அதிமுகவினரின் வாழ்த்து கோஷத்தை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி தனது காரை நிறுத்தினார். அவருக்கு செல்லூர் ராஜூ பூங்கொத்து மற்றும் சால்வையை கொடுத்து வரவேற்று பேசினார். அப்போது, அவரைத் தொடர்ந்து கூடியிருந்த கட்சியினர் எடப்பாடிக்கு சால்வைகள் கொடுத்து அவரை வரவேற்றனர்.

அந்நிலையில், செல்லூர் ராஜூ, கூட்டத்தை விலக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியின் காரில் பின்புற கதவை திறந்து உள்ளே சென்று உட்கார முயன்றார். அப்போது, முன்சீட்டில் இருந்த எடப்பாடி, அவர்கள், பின்னால் திரும்பி கையை காட்டியவாறு ''வேண்டாம்.. வேண்டாம்..பின்னால் அந்த வண்டில வாங்க... அதுல வாங்க, எனக் கூறியதோடு, செல்லூர் ராஜூவை காரில் ஏறவிடாமல்  தடுத்து நிறுத்தினார். இதை சற்றும் எதிர்பாராத செல்லூர் ராஜூ, மன இறுக்கத்துடன் கூட்டத்திற்குள் இருந்து வெளியில் வரும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswamis action of stopping Sellur Raju from getting into his car is shocking in a video that has gone viral on the internet


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->