''எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு ரத்து துரதிஷ்டவசமானது: கலைஞர் ஒருபோதும் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார்'': சென்னை உயர் நீதிமன்றம்..!
The Madras High Court said that the Kalaingar would never have allowed the cancellation of house allotment to writers
எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்.
பிற்பகல் வழங்கி விசாரணையின் போது வைரமுத்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இவரின் வாதத்தை கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். ஐஏஎஸ் அதிகாரிகள் இணையான ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விவகாரம் துரதிஷ்டவசமானது என்றும், எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வு பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள் என்றும், கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The Madras High Court said that the Kalaingar would never have allowed the cancellation of house allotment to writers