சத்தீஸ்கர் ரயில்வே ஸ்டேஷனில் கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை: 45 நாட்களுக்குப் பின் தமிழகத்தில் மீட்பு..!
One and a half year old child kidnapped from Chhattisgarh railway station rescued in Tamil Nadu after 45 days
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சூர்யா சோனு தம்பதியின் ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி துர்க் ரயில் நிலையத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீர் என காணாமல் போனது.
ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் தேடிய நிலையில், குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் குறித்த குழந்தையின் தம்பதி காவல்நிலையத்தில் புகார் கொகொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார் அங்கு இருந்தசி.சி.டிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 45 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் குழந்தையோடு கவுண்டரில் டிக்கெட் வாங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக செயல்பட்ட சத்தீஸ்கர் மாநில காவல்துறையினர் குழந்தையை கடத்திய நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் வேளையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த நபர் டிக்கெட் முன்பதிவு செய்யபோது செல்போன் நம்பரை கொடுத்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். அந்த செல்போன் நம்பர் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தையை கடத்தி சென்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பதை கஉறுதி செய்துள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூரை சேந்த ஆறுமுகம் என்பவருக்கு பெற்றோர் இல்லை. 45 வயது ஆகியும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வெளிமாநிலங்களில் அவர் பிளம்பர் வேலை செய்து வந்துள்ளார்.
ஆறுமுகம் மீது இதுவரை எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் அவர், அமைதியாகவே வாழ்ந்து வந்துள்ளார். திடீரென ரயில் நிலையத்தில் வைத்து குழைந்தையை கடத்தியது ஏன்..? குழந்தையை அவர் என்ன செய்தார்..? விற்பதற்காக கடத்தினரா..? குழந்தை உயிரோடு தான் இருக்கிறதா..? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, தேடுதல் வேட்டையை தொடங்கினர். துர்க் ரயில்நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய ஆறுமுகம் நேராக கும்பகோணத்திற்கு வந்துள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இத அறிந்துக்கொண்ட சத்தீஸ்கர் போலீசார் குழந்தையின் பெற்றோரோடு தமிழ்நாட்டின் சாத்தனூருக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஆறுமுகம் வந்து பலநாள் ஆவதாகவும், அவர் ஒரு ஆண் குழந்தையை கையில் வைத்திறதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். பின்னர் சத்தீஸ்கர் போலீசார் திருநிலக்கடி போலீசாரின் உதவியை நாடி தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அறுமுகத்திற்கு சீர்காழியில் உறவினர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சீர்காழிக்கு சென்றுள்ளனர். அப்போது ஆறுமுகம் குழந்தையோடு கையும் களவுமாக சிக்கியுள்ளார். உடனடியாக குழந்தையை மீட்ட போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆறுமுகத்திற்கு குடும்பம் இல்லாமல், 45 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாததால் இருந்துள்ளதால் தனிமையில் வாடியுள்ளார்.
சமீபத்தில் தான் அவருக்கு குடும்பத்தின் அருமை தெரியவந்துள்ளது. சம்பத்தன்று ரயில்நிலையத்தில் குழந்தை தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த ஆறுமுகம் அதை கடத்தி சென்று தன்னுடைய குடும்பமாக்கி அந்த குழந்தையுடன் வாழலாம் என முடிவு செய்துள்ளார்.
இதற்காக தான் அந்த குழந்தையை கடத்தியதாக ஆறுமுகம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். பின்னர் ஆறுமுகத்தை சத்தீஸ்கர் போலீசார் கைது செய்து சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். கிட்டதட்ட 45 நாட்களாக 2000 கிலோமீட்டருக்கு மேல் பயணம்செய்து இறுதியில் தமிழகத்தில் அந்த குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
English Summary
One and a half year old child kidnapped from Chhattisgarh railway station rescued in Tamil Nadu after 45 days