சுகாதாரமற்ற குடிநீர்..தொகுதி வாரியாக மருத்துவ முகாம் நடத்தும் திமுக!
Unclean drinking water DMK conducts medical camps on a ward basis
சுகாதாரமற்ற குடிநீரால் பாதிக்கப்பட்ட நெல்லித்தோப்பு சக்தி நகரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு தொகுதியில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்து மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமான மக்கள் வாந்தி வயிற்றுப் போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்த பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும், சுகாதாரமான குடிநீர் வழங்க வலியுறுத்தியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக சார்பில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில், திமுகவினர் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணியில் கழகத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை அரசு சார்பில் எந்தவொரு மருத்துவ முகாமும் நடத்தாத நிலையில், மக்களின் நலனை கருத்தில்கொண்டு திமுக சார்பில் நெல்லித்தோப்பு சக்தி நகர் பகுதியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வே. கார்த்திகேயன் ஏற்பாட்டில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது.
நெல்லித்தோப்பு தொகுதி கழக செயலாளர் செ. நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பெ. வேலன் முன்னிலையில் நடைபெற்ற மருத்துவ முகாமினை, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா அவர்கள் தலைமைதாங்கி துவக்கி வைத்து, அப்பகுதி மக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அந்த பகுதி மக்களின் நலனுக்காக தி.மு கழகம் எப்போதும் உடன் நிற்கும் என உறுதியளித்தார். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, 58 வகையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையான், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், வேலன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், வடிவேல், மருத்துவர் அணி அமைப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ், வர்த்தகர் அணி துணை தலைவர் குரு, மாணவரணி துணை அமைப்பாளர் கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ், கிருபா சங்கர், தாமரைக்கண்ணன், சசிகுமார், மாநில பிரதிநிதி முருகன்,மாநில தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் M. அருண், தொண்டரணி துணை அமைப்பாளர் கருணாகரன், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் A.ஞானராஜன், கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை A. ரமேஷ், சக்தி நகர் நிர்வாகிகள் சேனாதிபதி, பூபதி, ராஜேந்திரன், பட்டாணி ராஜேந்திரன்,கண்ணன், கந்தன், ராகவன், சுந்தர், சரவணன், சுகுமார், பாலாஜி, கணேஷ், கோகுல், மணி, நவீன், சஞ்சய், பிரதீப், கிளைச் செயலாளர்கள் M.மூர்த்தி, பரிதிமாள், ஏழுமலை, மணி, சோமு,சின்ராசு, பாபு, தயால்ராஜ், சுதன்,கிருஷ்ணகுமார், ஸ்டாலின், ரவி, உலகநாதன், விமல், வேலு, அர்ஜுனன், சரவணன், அன்பு, குமார், ராஜு, கேசவன், பாசில் பாய், சாமிதாஸ், ஞானவேல், மரியநாதன், பிரான்சிஸ், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Unclean drinking water DMK conducts medical camps on a ward basis