#உளுந்தூர்பேட்டை | எதிர் திசையில் சென்ற அரசு பேருந்து! அடித்து தூக்கிய லாரி! அலறி துடித்த பயணிகள்! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை அருகே எதிர் திசையில் சென்ற தமிழக அரசு பேருந்து மீது லாரி மோதி கொடூர விபத்தில், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. நேற்று இரவு 30 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து, உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான காரணம் : சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும். இதனை குறைக்க அரசு பேருந்து ஓட்டுநர் தங்கவேல் (வயது 47) நெடுஞ்சாலையின் எதிர் திசையில் சாலை விதிகளுக்கு புறம்பாக இயக்கியுள்ளார். 

அந்நேரம், பெரம்பலூரில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற லாரி எதிர்திசையில் தவறாக வந்த அரசு பேருந்து மோதியது.

இந்த கொடூர விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகள் காயமடைந்தனர். காயம்பட்டவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ulundurpettai Bus Lorry Accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->