'பழைய ஓனர் பங்களா' மோசமாக பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின்.! கொந்தளித்த ஜெ. தொண்டர்கள்.!  - Seithipunal
Seithipunal


இன்று தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு உதயநிதி அதுகுறித்து பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அதிமுகவையும் மறைமுகமாக விமர்சித்து இருக்கின்றார். 

சுதந்திரப் போராட்ட தியாகியான தீரன் சின்னமலையின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பதிவில் திமுக இளைஞரணி செயலாளர் தீரன் சின்னமலை நினைவு கூறும் வகையில்,"ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலையை அவரது நினைவு நாளில் போற்றுவோம். மக்கள் வரிப்பணத்தை கைப்பற்றி மக்களுக்கே கொடுத்த தீரன் சின்னமலை வழிவந்த தமிழகத்துக்கு, மக்கள் வரிப்பணத்தைப் பறித்து பழைய ஓனரின் பங்களா வாங்கும் அடிமைகள் வாய்த்தது துரதிர்ஷ்டம். விரட்டுவோம்!" என்று தெரிவித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாகவே தன்னுடைய ட்விட்டர் பதிவுகளில் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இருப்பினும் தீரன் சின்னமலைக்கு மரியாதை செய்யப்படும் பதிவில் கூட அனாவசியமாக அதிமுகவினை எதற்காக மறைமுகமாக தாக்குகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi stalin says about vedha illam 


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..
Seithipunal