விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின்..கட்சி நிர்வாகிகள் உற்சாகம் ! - Seithipunal
Seithipunal


இன்று காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் இன்று தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வளர்ச்சி திட்ட பணிகளை கள ஆய்வு செய்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், அமைச்சா்களுமான சாத்தூா் ராமசந்திரன், தங்கம் தென்னரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்றுவிருதுநகர் மாவட்டத்துக்கு வருகிறார். அப்போது விருதுநகரில் அவருக்கு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

மேலும் இன்று காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து 11 மணிக்கு சாத்தூரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறஉள்ளது . அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.இதையடுத்து அரசு மருத்துக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் மாலை 5 மணிக்கு கிருஷ்ணன்கோவிலில் நடக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhayanidhi Stalin in Virudhunagar party officials are excited


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->