ஹீரோவாக மட்டுமல்லாமல் ரேஸராவும் அதிரடி!!! நான்கு பிரமாண்ட கார் ரேஸில் பங்கேற்கும் அஜித் குமார்...! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் தல அஜித் குமார், வெறும் வெள்ளித்திரை நட்சத்திரம் மட்டுமல்ல, உலக அரங்கில் தன்னுடைய அடையாளத்தை பதித்துக் கொண்டிருக்கும் தீவிர கார் பந்தய வீரரும் ஆவார். இவர் 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி , தனது தனிப்பட்ட கனவான “Ajith Kumar Racing” என்ற பந்தய அணியை உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே துபாய், பெல்ஜியம் போன்ற சர்வதேச தரப்பட்ட பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளை கைப்பற்றியுள்ள அஜித் குமார், அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள பிரமாண்ட கார் ரேஸ்களில் பங்கேற்கிறார்.
வெளியான அதிகாரப்பூர்வ அட்டவணை:
செப்டம்பர் 27–28 – Creventic 24H
செப்டம்பர் 30–அக்டோபர் 1 – LMP3 Test
அக்டோபர் 6 – Mahindra Formula E Test
அக்டோபர் 11–12 – GT4 European Series
இந்த 4 பிரபலமான பந்தயங்களிலும் அஜித் பங்கேற்கவுள்ளதாக Ajith Kumar Racing நிறுவனம் அறிவித்துள்ளது.மேலும், திரைப்பட உலகிலும், ரேஸிங் உலகிலும் ஒரே நேரத்தில் ரசிகர்களின் இதயத்தை கவரும் தல அஜித், இப்போது தனது அடுத்த வெற்றிக்காக ஸ்பெயின் பந்தய அரங்கத்தை நோக்கிச் செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Not only hero but also racer Ajith Kumar participate four grand car races


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->