விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - நடந்தது என்ன?
fans push in vijay antony music concert
கோவையில் நடைபெற்ற இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா மைதானத்தில் 'விஜய் ஆண்டனி லைவ் இன் கான்செர்ட்' என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியைக் காண ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது ஒரே பாதையில் ரசிகர்களை இசை நிகழ்ச்சிக்கு செல்ல வரிசையில் நிற்க வைத்ததால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் ஆண்டனி தற்போது ''சக்தி திருமகன்'' படத்தில் நடித்துள்ளார். கடந்த 19-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
English Summary
fans push in vijay antony music concert