ரீ ரிலீசாகும் ரஜினிகாந்தின் மனிதன்.!!
manithan movie re release announce
கடந்த 1987ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து 25 வாரங்கள் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்ற படம் ‘மனிதன்’. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி உடன் சோ, வினு சக்கரவர்த்தி, ரூபிணி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், மற்றும் பலர் நடித்தனர்.
சந்திர போஸ் இசையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற “மனிதன்.... மனிதன், வானத்த பாத்தேன்..., காளை... காளை.., ஏதோ நடக்கிறது ..., முத்து முத்து பெண்ணே...” உள்ளிட்ட பாடல்கள் வைரலாகின.
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக திகழும் ரஜினிகாந்த், திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனால், ரஜினி சினிமாவில் பொன்விழா ஆண்டினை கொண்டாடி வருகிறார்.
அவருடைய ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வதற்கு ‘மனிதன்’ திரைப்படத்தினை டிஜிட்டல் முறையில் மாற்றி 38 ஆண்டுகள் கழித்து, வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள். இந்த நிலையில், குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனம் மனிதன் படத்தை தற்போது ரிலீஸ் செய்கிறது.
English Summary
manithan movie re release announce