நான் ஒரு சுதந்திர பறவை - திருமணம் குறித்து எஸ்.ஜே சூர்யா பதில்.!!
sj surya answer about marriage
கடந்த 2000-ம் ஆண்டு ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் - ஜோதிகா நடிப்பில் வெளியாகி பெருவெற்றி பெற்ற படம், 'குஷி'. இந்த படம் அப்போதே ரூ.22 கோடி வசூலை குவித்தது.
இந்த நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு 'குஷி' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற 25-ந்தேதி தமிழகம் முழுவதும் குஷி படம் ரீ-ரிலீசாகிறது.
சென்னையில் நடைபெற்ற இதன் படவிழாவில் பங்கேற்ற இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், ‘குஷி' படத்தின் அடுத்த பாகம் வருமா? என்று கேட்கிறார்கள். ‘குஷி' இறைவன் அமைத்து கொடுத்த படம். அதேபோன்ற நிலை மீண்டும் அமைந்தால் பார்க்கலாம். இப்போது என் கவனம் நடிப்பில் மட்டுமே இருக்கிறது. நான் ஒரு ‘ஸ்டார்' நடிகனாக ஆகவேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். இயக்குனர் ஆனதே என்னை நடிகனாக்கத்தான், என்றார்.
இதற்கிடையில் நிருபர்கள் தரப்பில் 'திருமணம் செய்யாமல் முரட்டுக்காளையாக சுற்றுகிறீர்களே... எப்போதுதான் திருமணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘நான் ஒரு சுதந்திர பறவை. அப்படியே இருந்திடுகிறேனே... விட்டுடுங்கள்'', என்று கூறி சிரித்தார்.
English Summary
sj surya answer about marriage