என் செல்லத்துக்கு என்னாச்சு...! சான்வி மேகனா கையில் எண்ணெய் காயம்...ரசிகர்கள் பதட்டம்...!
shaanvi Meghanas hand got an oil wound Fans are worried
தமிழில் ‘குடும்பஸ்தன்’ படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் 'சான்வி மேகனா'. இந்த படம் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தனது முன்னணியை உறுதி செய்யும் நோக்கில் கவர்ச்சி காட்சிகளுடன் தொடர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் சான்வி மேகனா ஒரு சிக்கலில் சிக்கினார். அங்கு சமையல் காட்சி ஒன்றை படமாக்கும்போது கொதிக்கும் எண்ணெய் தொட்டுச் சென்று அவரது கையை காயப்படுத்தியது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சான்வி மேகனா தெரிவித்ததாவது, “விபத்துகள் எப்போதும் எதிர்பாராத விதமாக நிகழலாம்.
மீண்டுவருவது நம்மைத் தான் சார்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
shaanvi Meghanas hand got an oil wound Fans are worried