பாகிஸ்தானில் பரபரப்பு குண்டு வெடிப்பு! தலிபான் கட்டிடம் அருகே 14 பயங்கரவாதிகள் பலி...!
Bomb blast in Pakistan 14 terrorists killed near Taliban building
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம், கைபர் மாவட்டம் திராக் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று பரபரப்பூட்டும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தாக்குதலுக்கு அருகே இருந்த பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டிடத்தில் 14 பயங்கரவாதிகள் சாவடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பக்துவா மாகாணத்தில் செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்துள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தாக்குதலை யார் செய்தது என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் சம்பவத்தை கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Bomb blast in Pakistan 14 terrorists killed near Taliban building