தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது 'ஜன நாயகன்' தயாரிப்பு நிறுவனம்..!
Jan Nayakan Production Company has withdrawn the censorship certificate case
ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது.
மீண்டும் நீதிமன்றம் சென்றால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க இன்னும் தாமதமாகும் என்பதால், திரைப்படத்தை மறு தணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தணிக்கை வாரியம் மூலமாகவே இப்பிரச்சினையை முடிக்க படக்குழு இந்த முடிவெடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 09 அன்று சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி (நீதிபதி ஆஷா), படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது.

அதனை தொடர்ந்து, ஜனவரி 27, 2026- ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, "தணிக்கை வாரியத்தின் தரப்புக் கருத்தைக் கேட்காமல் தனி நீதிபதி தீர்ப்பளித்தது தவறு" எனக் கூறி அந்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், அந்த வழக்கை தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் எனவும் உத்தரவிட்டது.
தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில் இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்தது. தற்போது, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் படக்குழு 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. ஜனவரி 09 தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
English Summary
Jan Nayakan Production Company has withdrawn the censorship certificate case