ஆந்திராவில் பழங்​குடி​யினரின் வசதிக்​காக வனப்​பகு​தி​களில்905 கி.மீ. தொலைவுக்கு தார் சாலை: துணைமுதல்வர் பவன் கல்யாண் தகவல்..! - Seithipunal
Seithipunal


ஆந்​தி​ரா​வில்  சுமார் ரூ.1,005 கோடி செல​வில் பழங்​குடி​யினரின் வசதிக்​காக வனப்​பகு​தி​களில் 905 கி.மீ. தொலை​வுக்கு தார் சாலை அமைக்​கப்​பட்டுள்​ளதாக அம்மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது;

'வனத்​தாய் மார்​கம்' திட்​டத்​தின் கீழ் பழங்குடியினருக்​காக ஆந்​தி​ரா​வின் மலைப்​பகு​தி​களில் குக்​கி​ராமங்​களுக்​கும் தார் சாலை வசதி செய்ய திட்​ட​மிடப்​பட்​டது.

மொத்​தம் 2,310 கி.மீ தொலை​வுக்கு தார் சாலைகள் அமைக்க ரூ.2,078 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. தெலுங்கு தேசம் கட்​சி​யின் ஆட்​சி​யில் இது​வரை 905 கி.மீ. தொலை​வுக்கு வனப்​பகு​தி​களில் தார் சாலைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

மலைகள், காடு​கள், மேடு பள்​ளங்​களை சரிசெய்து வாக​னங்​கள் எவ்​வித சிரம​மும் இன்றி செல்​லும் வகை​யில் சாலைகள் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. மேலும் ரூ.1,005 கோடி செல​வில் பழங்​குடி​யினர் வசிக்​கும் பகு​தி​களில் அடிப்​படை வசதி​கள் செய்​யப்பட உள்​ளன.'' என்று பவன் கல்யாண் அறிக்​கை​யில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pawan Kalyan informed that 905 km of roads have been constructed in forest areas in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->