'தொகுதி மறுவரையறை வந்தா ஓட்டம் தானா'...? - திமுக வெளிநடப்பு செய்யப் போவதாக அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி புகார்...!
Will it be a runoff if constituency redefinition comes Minister Nirmal Kumar dramatic complaint that DMK going walk out
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,"தற்போதைய சூழலில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை அவசரமாக மேற்கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஆனால், அரசியல் நோக்கத்துடன் மத்திய அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக தெரிகிறது.மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தமிழகத்தின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் உருவாகலாம்.

இதன் மூலம் தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.மேலும், இந்த நடவடிக்கை சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் வகையில் அமையக்கூடும். எனவே, தமிழகத்தின் உரிமைகளையும் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
திமுக ஏற்கனவே பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக அவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சர் குற்றம்சாட்டினார்.
கடந்த ஏப்ரல் மாதம் திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அந்த நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். ஆனால், தற்போது மசோதா கொண்டுவரப்படும் நேரத்தில் திமுக வெளிநடப்பு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திமுக வெளிநடப்பு செய்யும் முடிவை எடுத்தால், அது தமிழகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாக அமையும்.ஆட்சியில் இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆட்சியில் இல்லாதபோது வேறு நிலைப்பாட்டையும் திமுக எடுத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தங்களது அரசியல் மற்றும் குடும்ப நலன்களை பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனையும் பாஜகவிடம் அடகு வைக்க திமுக முயற்சிப்பதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.எனவே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
English Summary
Will it be a runoff if constituency redefinition comes Minister Nirmal Kumar dramatic complaint that DMK going walk out