உ.பி.யில் பெரும் துயரம்; சுற்றுலா பஸ் தீப்பிடித்த விபத்தில் பெண் உள்பட 09 பேர் உடல் கருகி பலி..!
9 people burnt to death after a tourist bus caught fire in UP
டெல்லியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவுக்கு நேற்று நள்ளிரவு படுக்கை வசதி கொண்ட சுற்றுலா பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுள்ளது. இன்று அதிகாலை உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் சென்றபோது பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், பிரேக் போட்டு சாலையோரம் பஸ்சை நிறுத்தி கீழே குதித்துள்ளார்.
இதற்கிடையில் பஸ்சில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவர்கள், திடுக்கிட்டு எழுந்து அலறி துடித்துள்ளார். சிலர், ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்துள்ளனர். இருப்பினும் துரதிஷ்டவசமாக ஒரு பெண் உட்பட 09 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஜெவார் காவல் நிலைய அதிகாரிகள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்துள்ளனர். மேலும் தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதன்படி, மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
English Summary
9 people burnt to death after a tourist bus caught fire in UP