தேர்தல் நடத்தை விதிகள்; மதுராந்தகம் தொகுதியில் பறக்கும்படையினரின் வாகன சோதனை மூலம் இதுவரை ரூ.14 லட்சம் பறிமுதல்..!
Rs 14 lakh seized so far through vehicle checks by the flying squad in the Maduranthakam constituency
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 06-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் சட்டவிதிப்படி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகள் நடைபெறுகின்றன. அதன்படி 09 பறக்கும் படை குழுக்களும், 09 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 02 காணொளி கண்காணிப்பு குழுக்களும், 01 காணொளி பார்வை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கூடுதலாக 5 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பறக்கும் படையினர் மதுராந்தகம் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் 24-ஆம் தேதி வரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் இதுவரை ரூ.14.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்காக பணம் வழங்குவதை தடுப்பதற்கான அனைத்தும் பணிகளை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
English Summary
Rs 14 lakh seized so far through vehicle checks by the flying squad in the Maduranthakam constituency