மன்னிப்பு கேட்டும் மன்னிக்க முடியவில்லை...! -நிஜம் பட அனுபவத்தை கண்ணீர் கலந்த குரலில் பகிர்ந்த ராசி - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவை 90களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை 'ராசி'. முதலில், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அவர், பின்னர் பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாக திகழ்ந்து ரசிகர்களை கவர்ந்தார்.

பாரம்பரிய அழகு, கவர்ச்சி கதாபாத்திரங்கள் - இரண்டிலும் தனக்கென ஓர் அடையாளம் ஏற்படுத்தியவர். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் ‘ப்ரியம்’ (1996), ‘லவ் டுடே’ (1997) போன்ற படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் நீங்கா இடம்பிடித்தது.ஆனால், மகேஷ் பாபுவின் ‘நிஜம்’ படத்தில் வில்லனின் மனைவி என்ற எதிர்மறை வேடத்தில் நடித்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

அந்த அனுபவம் குறித்து அண்மையில் பேட்டியில் ராசி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.அவர், “நிஜம் படப்பிடிப்பின் முதல் நாளே, எனக்கு விருப்பமில்லாத ஒரு காட்சியில் இயக்குநர் நடிக்கச் செய்தார். அந்தக் காட்சி இருப்பதை அவர் முன்பே தெரிவிக்கவில்லை. அதை நடித்தால் என் வாழ்க்கையே பாதிக்கப்படும் என்று அப்போது உணர்ந்தேன்.

ஆனால், இயக்குநர் வற்புறுத்தியதால் மனம் வருந்தியே நடிக்க வேண்டியிருந்தது.பின்னர் டப்பிங் வேலைக்கு சென்றபோது, இயக்குநர் தேஜா எனக்கு நேரடியாக போன் செய்து மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த சம்பவம் எனக்கு ஆழ்ந்த காயம் ஏற்படுத்தியது. இன்று வரை நான் அவரை ஒருபோதும் மன்னிக்கவில்லை. யாராவது ‘நீங்கள் மறக்க விரும்பும் இயக்குநர் யார்?’ என்று கேட்டால், உடனே தேஜாவின் பெயரைத்தான் சொல்வேன்,” என்று அவர் கடுமையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I couldnt forgive even after apologizing Raasi shared her experience filming Nijam tearful voice


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->