வெளியானது காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர்.!!
kanthara chapter 1 movie trailer released
கடந்த 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்த இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகினாலும் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப்படம் அடுத்த மாதம் 2-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள காந்தாரா சாப்டர்1' படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
English Summary
kanthara chapter 1 movie trailer released