சபரிமலை தங்கம் கொள்ளை: பணம் ரூ.2 கோடி எங்கே? நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக வெளிச்சம்...! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட தங்கம் கொள்ளை விவகாரம் கேரள அரசியல் மற்றும் பக்தி வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோவிலின் புனிதத்தை குலைக்கும் வகையில் வெடித்த இந்த சர்ச்சையில், சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்திரியிடம் சிறப்பு புலனாய்வு குழு நடத்திய தீவிர விசாரணையில், தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலம் ரூ.2 கோடி பணம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த தொகையை திருவல்லாவில் செயல்பட்ட ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அந்த நிறுவனம் கடும் நஷ்டத்தால் மூடப்பட்டிருப்பது விசாரணையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், மூடப்பட்ட நிதி நிறுவனம் மற்றும் அதை நடத்திய என்.எம். ராஜுவின் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை சேகரித்தனர்.

நிதி மோசடி வழக்கில் ராஜு ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ புகாரும் பதிவு செய்யப்படாதது புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. சபரிமலையின் புனிதப் பின்னணியில் வெடித்த இந்த பணச் சர்ச்சை, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sabarimala gold heist Where 2 crore come light that money invested financial institution


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->