தமிழக பட்ஜெட் 2026-27; சென்னை மாநகர் மறுசீரமைப்பு திட்டம்; கூவம் ஆற்றில் படகு சவாரி மற்றும் நதிக்கரை நடைபாதை..!
Boating on the Cooum River in the Chennai Metropolitan Redevelopment Plan in Tamil Nadu Budget 2026 to27
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அவரது உரையில் பல புதிய திட்டங்களுக்கான அதிரடி அறிவிப்புக்களை அறிவித்துள்ளார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் என்ன என்ன புதிய அறிவுக்கல வெளியாகும் என் எதிர்பார்த்து இருந்த நிலையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட இருந்ததால், கடந்த பிப்ரவரி மாதம் திமுக அரசு 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் கடந்த 05 ஆண்டுகளில் கடன் இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதிகமான வட்டியை செலுத்தி வருகிறதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னை மாநகர் மறுசீரமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், நடைபாதைகள், தெருக்கள் & நகர்ப்புறப் போக்குவரத்து மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக அறிவித்தார்.
அதன்படி சென்னையில் 20 இடங்களில் திறன்மிகு வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், அம்பத்தூர் & கிண்டி தொழிற்பேட்டை சாலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், அதேபோல் பசுமை & மக்கள் மைய பொது இடங்கள் உருவாக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகத் தரத்தில் சென்னை நதிகளை மறுசீரமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கூவம் & அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்காக விரிவான சாத்தியக்கூறு & திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு படகு சவாரி, நதிக்கரை நடைபாதை & பொழுதுபோக்கு வசதிகள் சென்னையின் புதிய அடையாளமாக கூவம் & அடையாறு மாறும் எனவும் நடப்புய நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார்.
English Summary
Boating on the Cooum River in the Chennai Metropolitan Redevelopment Plan in Tamil Nadu Budget 2026 to27