ஜெம் வீரமணி வழக்கை திமுக ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார்? HD தர வீடியோ கொடுக்கணுமோ? அமைச்சர் ராஜ்மோகன் கடும் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில் முந்தைய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"பாலியல் புகாருக்கு உள்ளான ஜெம் வீரமணி வழக்கை முந்தைய ஆட்சியில் மூட வலியுறுத்தியது யார்? இந்த விஷயத்தில் அன்றைய ஆட்சியாளர்கள் யாரைக் காப்பாற்ற நினைத்தார்கள்? திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி இது குறித்துக் கூறும்போது, வழக்கின் ஆடியோ ஆதாரம் தெளிவில்லாமல் இருப்பதாகக் கூறியிருந்தார். ஜெம் வீரமணி வழக்கில் எச்.டி. (HD) வீடியோவா கொடுக்க முடியும்?" என்று அவர் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்த அவர், "கடந்த ஆட்சியில் இவ்வழக்கில் எந்த மாதிரியான மேலோட்டமான விசாரணை மேற்கொள்ளப்பட்டது, தற்போது தவெக ஆட்சியில் விசாரணை எவ்வளவு துரிதமாகவும் நேர்மையாகவும் நடைபெறுகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை நிலவரம் புரியும். அமெரிக்காவின் 'எப்ஸ்டீன் வழக்கு' (Epstein Files) போல இந்த ஜெம் வீரமணியின் வழக்கு பல்வேறு அதிர்ச்சித் தகவல்களுடன் உருவெடுத்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

ஜெம் வீரமணி விவகாரத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் காவல் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது செல்வாக்குமிக்க அரசியல் புள்ளிகளாக இருந்தாலும் சரி, தயவு தாட்சண்யமின்றி அவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; வயதையோ, பணத்தையோ மற்றும் சமூகச் செல்வாக்கையோ காரணம் காட்டி இக்குற்றத்தில் தொடர்புடைய யாரும் தப்பிவிட முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் எச்சரித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gem Veeramani Case Like Epstein Files Strict Action Regardless of Influence Minister Rajmohan Slams DMK


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->