2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதில் தவெக அரசு உறுதி; நிதி அமைச்சர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை தாக்​கல் செய்​வதற்​காகச் சட்​டப்​பேரவை இன்று காலை கூடியது. அதன்​படி காலை 10 மணிக்கு, பொது பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்​கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், தமிழகத்தை வறுமை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்கக்கூடிய மாநிலமாகவும், 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றுவதற்குத் தேவையான சமூக பொருளாதாரம் மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு தவெக அரசு உறுதிபூண்டுள்ளது என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தனது பட்ஜெட் உரை நிகழ்த்தி வருகிறார். அதில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற இந்த குறுகிய காலத்திலேயே பல துறைகளில் கனிசமான முன்னேற்றங்களும், மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் பல முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெற்றி என்றும், மக்களின் நலன்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், நமது அரசு அறம், பொருள், இன்பத்தை நோக்கமாக வைத்து 10 தூண்களைக் கொண்ட 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு திட்ட ஆவணத்தை வெளியிட்டுள்ளது.'' என்று அறிவித்துள்ளார்.

'வெற்றித் தமிழகம்' திட்டத்தின்  அடிப்படையில் திட்டங்களை அடுத்து வருகிற முதலாம், மூன்றாம், ஐந்தாம் ஆண்டுக்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களை வகைப்படுத்தி, அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறதாகிவரும் கூறியுள்ளார்.

அத்துடன், தேசிய அளவில் பல சமூக பொருளாதார குறியீடுகளில் முன்னிலையில் திகழும் மாநிலமாக தமிழகம் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை வறுமை இல்லாத, அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்கக்கூடிய மாநிலமாகவும், 2036-ஆம் ஆண்டுக்குள்1.5 ட்ரில்லியன் (ரூ.142.6 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றுவதற்குத் தேவையான சமூக பொருளாதாரம் மற்றும் மனித வள முதலீடுகளை மேற்கொள்வதற்கு தவெக அரசு உறுதிபூண்டுள்ளது என்று நிதியமைச்சர் வில்சன் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finance Minister announces that Tamil Nadu will be transformed into a state with an economy of more than 1 trillion by 2036


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->