தமிழக பட்ஜெட் 2026-27; மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு; 5 மாவட்டங்களில் 'நம்பிக்கை இல்லம்'..!
TN Budget 2026 to 27 allocates Rs 1485 crore for the welfare of differently abled people
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். தற்போது முழு பட்ஜெட் குறித்து உரை நிகழ்த்தி வருகிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய முதல்வர் விஜய் மனதார எண்ணுகிறார் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த 2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 05 மாவட்டங்களில் 'நம்பிக்கை இல்லம்' அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

அதாவது, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற நமது அரசின் சமத்துவக் கொள்கையின் அடிப்படையில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போதுள்ள உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் இடம்பெறாத செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன உதவி உபகரணங்களான விளையாட்டு செயற்கை கால், மின்தசை சமிக்ஞை மூலம் செயல்படும் மேல்கை செயற்கை அவயம் மற்றும் பிற உயர்தர உதவி உபகரணங்கள் மற்றும் 'கோக்ளியர் இம்ப்ளான்ட் பேட்டரி' போன்ற உயர்வகை உபகரணங்களை வாங்குவதற்காக, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 30,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், அறிவுசார் குறைபாடு உடையோருக்கான அரசு நிறுவனங்கள் 'நம்பிக்கை இல்லம்' என்ற பெயரில் அமைக்கப்படும் எண்டுறம், இந்நிறுவனங்களில், மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வி, ஆரம்பகால பயிற்சி சேவைகள், மறுவாழ்வு மற்றும் தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்றும் பெட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
இதன் தொடக்க நிலையில், ஒவ்வொரு நிறுவனமும் 50 மாணவர்கள் பயிலும் பகல்நேரப் பள்ளியாக செயல்பட்டு, பின்னர் தங்குமிட வசதியுடன் கூடிய நிறுவனமாக மேம்படுத்தப்படும் என்றும், இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தத் திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
English Summary
TN Budget 2026 to 27 allocates Rs 1485 crore for the welfare of differently abled people