தேர்தல் ரேஸுக்கு ரெடி த.வெ.க.! 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வேட்டை தொடக்கம்...! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க. அரசியல் களம் முழுவதும் தீவிரப்படுத்தி, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் வேகமெடுத்துள்ளது. தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மறுபக்கம் ‘தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா?’ என்ற முக்கிய முடிவை இன்னும் வெளிப்படுத்தாமல் கட்சி வியூக ரீதியான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், த.வெ.க. சார்பில் தேர்தலில் களம் இறங்க விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் செயல்முறை இன்று முதல் தொடங்குகிறது. இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் மனுக்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என்றும், தினமும் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பரிசீலிக்க மாநில நிர்வாகிகள் அடங்கிய தனிப்படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே மாவட்ட செயலாளர்கள் மனுக்கள் பெறுவதால், பனையூர் அலுவலகம் அரசியல் உற்சாகத்தால் களைகட்டியுள்ளது.

தேர்தல் முன் த.வெ.க. எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, கட்சியின் அடுத்த அரசியல் நகர்வை எதிர்நோக்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tvk ready election race process collecting applications from prospective candidates 234 constituencies begun


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->