நான் என்ன தவறு செய்தேன்...? - மக்கள் முன் நேரடி கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்...!
What mistake did I make Jayakumar raised question directly front people
சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அரசியல் உற்சாகத்தால் களைகட்டியது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றிய போது, அவரது பேச்சு உணர்ச்சியும் சவாலும் கலந்ததாக அமைந்தது.
“2001 முதல் நடந்த தேர்தல்களில் என்னை வெற்றி பெற வைத்த நீங்கள், 2021-ல் மட்டும் ஏன் கைவிட்டீர்கள்?” என்று நேரடியாக மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், “நான் என்ன தவறு செய்தேன்? ஊரை ஏமாத்தினேனா, கட்டப் பஞ்சாயத்து நடத்தியேனா, கள்ளச்சாராயம் காய்ச்சினேனா, ரவுடித்தனம் செய்தேனா? அப்படியென்றால் அரசியலை விட்டு விலகத் தயார்” என்று ஆவேசமாகப் பேசினார்.

அ.தி.மு.க.வும் தானும் எப்போதும் மக்களுக்காகத்தான் செயல்பட்டதாகக் கூறிய அவர், “என் அரசியல் வாழ்க்கை முழுவதும் உங்களைச் சுற்றியே தான். இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும் நான் நிற்பேன்… அதுவும் ராயபுரத்தில்தான் நிற்பேன்” என உறுதியுடன் தெரிவித்தார்.
“வேறு தொகுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தாலும், என் சொந்த மண், என் அரசியல் அடையாளம் ராயபுரம்தான்” என்ற அவரது வார்த்தைகள் கூட்டத்தில் கைதட்டலைக் கிளப்பின. அவரது உரை, ராயபுரம் மீது உள்ள பாசத்தையும், மீண்டும் களம் இறங்கும் அரசியல் உறுதியையும் வெளிப்படுத்தியது.
English Summary
What mistake did I make Jayakumar raised question directly front people