மலை கிராம மக்களிடையே மோதல் - காவல்துறையினர் சிறை - வேலூரில் பரபரப்பு.!!
village peoples seized police officers in vellore
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பீஞ்சமந்தை மலைப் பகுதியில் உள்ள செங்காடு கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.
இந்தத் திருவிழாவில், அல்லேரி பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தகராறு செய்ததனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அல்லேரி மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள், செங்காடு கிராமமக்களைக் கத்தி, கோடாரி ஆகியவற்றால் தாக்கியுள்ளனர்.
இதில் பலருக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ஆனால், தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட செங்காடு கிராம மக்களையே காவல்துறை கைது செய்ய முயன்றதாகவும், ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கூறி, கிராம மக்கள் காவலர்களை விரட்டியுள்ளனர்.
இதையடுத்து சக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சட்டப்படியும் நியாயப்படியும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, சிறைபிடிக்கப்பட்ட காவலர்களை மீட்டனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
village peoples seized police officers in vellore