"உங்களை விடமாட்டோம்!": ஆயுள் தண்டனை கொடுத்த நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே கொலை மிரட்டல் - உ.பி-யில் அதிரடி! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 2024-ஆம் ஆண்டு கார் ஏற்றி ஒருவரைப் படுகொலை செய்த வழக்கில் இன்று அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டது. கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நிஜேந்திர குமார், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெய்தீப் மற்றும் பிந்து சவுகான் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் அரங்கேறிய பரபரப்பு:
நீதிபதி தண்டனை விவரத்தை அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, குற்றவாளிகள் இருவரும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றனர். நீதிமன்ற அறையிலேயே நீதிபதியைப் பார்த்து, "உங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியும், உங்களை விடமாட்டோம்" எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்தனர். இந்தத் துணிச்சலான மிரட்டல் அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு அதிகரிப்பு:
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சங்க்ராம் சிங் உத்தரவின் பேரில் நீதிபதி நிஜேந்திர குமாருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற மாண்பைச் சீர்குலைத்ததற்காகவும், உயயரிய பொறுப்பில் உள்ள நீதிபதியை மிரட்டியதற்காகவும் அவர்கள் மீது கூடுதல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிய நீதிபதிக்கு விடுக்கப்பட்ட இந்த மிரட்டல், அம்மாநில நீதித்துறை வட்டாரத்தில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UP Courtroom Drama Convicts Threaten Judge with Death After Life Sentence


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->