நீரில் எரியும் கேஸ் அடுப்பை கண்டுபிடித்துள்ள தமிழக விஞ்ஞானி: ஜனவரி முதல் விற்பனை..?
Tamil Nadu scientist invents water burning gas stove
தண்ணீரில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பை தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் என்பவர் கண்டுபிடித்துள்ளார். பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளுக்கு மாற்றாக இவ்வாறு கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது.
அதன்படி, சேலத்தை சேர்ந்த விஞ்ஞானி தண்ணீரில் எரியும் அடுப்பை கண்டுபிடித்துள்ளார். இதற்கு அவர் வைத்துள்ள பெயர் ஹைட்ரஜன் ஆக்சிஜன் நோ கார்பன் கேஸ். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஹைட்ரஜன் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.
பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சியை ஒன்றிணைந்து மேம்படுத்தும் நோக்கில் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த ஹாங்க் கேஸ் நிறுவனம், தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயுவின் மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கான சாதனங்களை காட்சிப்படுத்தியது.

ஒன்றிய அரசின் முறையான அனுமதிக்காக இந்த புதிய கண்டுபிடிப்பு சாதனம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதற்கான உரிமம் கிடைத்தவுடன், ஜனவரியில் இந்த ஹைட்ரஜன் எரிவாயு அடுப்பு விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுவதாக ஹாங்க் கேஸ் நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். எரிபொருட்கள், எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில், தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலம் இயங்கும் கேஸ் அடுப்புகள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
English Summary
Tamil Nadu scientist invents water burning gas stove