பொன்னேரி அருகே பதற்றம்: அனல்மின் நிலைய கட்டுமான பணி: ஆயில் ஏற்றி வந்த லாரியில் தீ பற்றியுள்ளது..!
A truck carrying oil caught fire during construction work at a thermal power plant near Ponneri
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அனல்மின் நிலையத்தில் மின்மாற்றியில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் நிரப்பும் பணிகளின் போது திடீர் என தீ பற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரியில் உள்ள வயலூர் என்ற கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல்மின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு அதிக அளவிலான மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை கொண்டு இங்கு மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு தலா 660 மெகா வாட்ஸ் திரன் உள்ள இரண்டு அலகுகளில் 1320 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்யக்கூடிய அளவில் இந்த அனல்மின்னல் கட்டுமான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குறித்த அனல்மின் நிலையத்தில் மின்மாற்றியில் டேங்கர் லாரியில் இருந்து ஆயில் நிரப்பும் பணிகளின் போது திடீர் என தீ பற்றியுள்ளது. இதனால் அந்த பகுதியில் கரும் புகையுடன் சூழ்ந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், மூன்று நிலையங்களில் இருந்து வந்த தீயை தண்ணீரையும் ரசாயன நுரையும் பிச்சு அடித்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக தீ அருகில் பரவாமல் கட்டுப்படுத்தி தொடர்ச்சியாக லாரியிலும் மின்மாற்றியிலும் முழுமையாக தீயை அணைத்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதின் காரணமாக அனல்மின் கட்டுமானப்பணிகளில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டுள்ளது. தொடர்ச்சியாக தீ விபத்திற்கான கரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A truck carrying oil caught fire during construction work at a thermal power plant near Ponneri