தொடர் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி..ஆணைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!
Financial aid for treatment of chronic diseases the opposition party leader has issued orders
வில்லியனூர் தொகுதி ஆதிதிராவிட பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சைக்கு நிதியுதவி ஆணை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிட நலத்துறை மூலம் தொடர் நோயை குணப்படுத்த நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வில்லியனூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட பயனாளிகள் 10 பேருக்கு சிகிச்சை பெறுவதற்கான உதவித் தொகை அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு தொடர் நோய் சிகிச்சை பெறுவதற்கான உதவித் தொகை அடையாள அட்டையை வழங்கினார்.
இதில், திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், அவைத் தலைவர் ஜலால், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், ஆதிதிராவிடர் அணித் தலைவர் பழனிசாமி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், தொகுதி பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, அக்பர், கிளைக் கழக நிர்வாகிகள் சபரி, ராஜி, மிலிட்டரி முருகன், தட்னாமூர்த்தி, அருள்மணி, நடராஜன், சராபூதீன், காளிதாஸ், ராமஜெயம், சேகர், அஞ்சாபுலி, ரகு, காளிதாஸ், சந்தோஷ், நாகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
Financial aid for treatment of chronic diseases the opposition party leader has issued orders