நக்சலைட்டு இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நமது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி: அமித்-ஷா பெருமிதம்..!
Amit Shah hails huge victory of our security forces against Naxalites
சத்தீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்கள் ஆதிக்கம் இருந்து வந்த நிலையில், அவர்களை முற்றிலும் ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் போது ஏராளமான நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையில் மனம் திருந்தி பலரும் சரணடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சலைட்டுகளின் தலைவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், நமது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; 'நக்சலைட்டுகளுக்கு எதிராக மற்றொரு மிகப்பெரிய வெற்றியை நமது பாதுகாப்பு படையினர் அடைந்துள்ளனர். மஹாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மாட் பகுதியில், நக்சலைட்டுகளின் மத்தியக் குழு உறுப்பினர்களான கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் காத்ரி சத்யநாராயண ரெட்டி ஆகியோரை சுட்டுக்கொன்றனர்.
நக்சலைட்டுகளின் தலைமையை அழிப்பதன் மூலம், பயங்கரவாதத்தின் முதுகெலும்பை நமது பாதுகாப்புப் படைகள் முறியடித்து வருகின்றன.' என்று கூறியுள்ளார். இதேவேளை, சுட்டுக்கொல்லப்பட்ட இருவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.80 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Amit Shah hails huge victory of our security forces against Naxalites