திருப்பதி உண்டியலில் ரூ.100 கோடி திருட்டு..? அரசியல் வேண்டாம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்காலத்தில் திருப்பதி கோயில் உண்டியலில் ரூ.100 கோடி திருட்டு நடந்ததாக பாஜக விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது.

இதற்கு பதிலளித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், 2023 ஏப்ரலில் ஸ்ரீவாரி ஹம்பி உண்டியல் பணத்தில் அமெரிக்க டாலர்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடைபெற்றதாக தெரிவித்தது. குற்றவாளிகளிடம் இருந்து ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறியது.

தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜக உண்மையைத் திரித்து மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றன என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஜெகன் ஆட்சியின் தோல்வியை மறைக்க இறைவன் வெங்கடேஸ்வராவின் பெயரை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்றும் கட்சி தெரிவித்தது.

மேலும், இதுபோன்ற திருட்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் நடந்திருந்தால் மீட்கப்பட்ட சொத்துகள் கோயிலுக்கே சென்றிருக்கும் எனும் சந்தேகத்தையும் முன்வைத்தது. மக்களும் எச்சரிக்கையுடன் இருந்து, ஆன்மிகத் தலங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் முயற்சிகளை உணர வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வலியுறுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tripathy temple undiyal scam YSRC


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->