சென்னையில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்து: தம்பதி பரிதமாக உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


திருவள்ளுர் மாவட்டம் ஆவடி அடுத்து திருவேற்காடு ஈஸ்வரி நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் அறிவரசன் (41). இவரது மனைவி சரண்யா தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 05 வயதில் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அறிவரசன் மனைவி உடன் ஸ்கூட்டரில் ஆவடி வசந்தம் நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஸ்கூட்டரில் மோதி இழுத்து சென்றுள்ளது. இதன் போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி தலைக்குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த அறிவரசன் சரண்யா தம்பதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தை 46 வயதான அரசு மருத்துவர் ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் அவரும் காயம் அடைந்து சம்பவ இடத்தில் விழுந்து கிடந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விசாரணையில் காரை அவர் வேகமாக ஓட்டி சென்ற போது திடீர் என வலிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் குறித்த விபத்து நடந்தது தெரியவந்ததுள்ளது. மருத்துவர் சிகிச்சை முடிந்து நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் மீது அதிவேகமாக கார் ஓட்டுதல் அலட்சியமாக வாகனம் ஓட்டி உயிர் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 04 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple tragically dies in Chennai car crash


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->