அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள் இல்லை: சசி தரூர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை என காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் கூறியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெறாத வெளிநாட்டினர் அந்நாட்டில் தங்கி பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசாவுக்கான கட்டணத்தை அதிபர் டிரம்ப் ரூ.88 லட்சமாக உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்பி சசி தரூர் இது குறித்து கூறியதாவது:

எச்1பி விசா விவகாரத்தில் நாம் விதியை வகுக்க வேண்டாம். இது நமக்கு பின்னடைவு. எதிர்பாராதது. இது குறுகிய காலத்தில் சில தனி நபர்களையும் நிறுவனங்களையும் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீண்ட காலத்துக்கு உண்மையில் நம்மை வலுப்படுத்தக்கூடிய வகையில் பதில்களும் உள்ளன என்றும், இந்த விஷயத்தில் நாம் பாதிக்கப்பட்டவர்கள் என்று தொடர்ந்து எண்ணக்கூடாது என்று பேசியுள்ளார்.

அத்துடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் நமக்கு எதிர்மறையான திசையில் கணிக்க முடியாதவராக இருக்க முடிந்தால், வரும் காலங்களில் அவர் நமக்கு எ திர்பாராத விதமாக நேர்மறையாக மாறக்கூடும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவில் போதுமான பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் இல்லை என்று கூறியதோடு, டிரம்ப்பின் முடிவின் விளைவானது, தற்போது அமெரிக்காவில் செய்யப்படும் சில வேலைகள் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் உள்ள நிறுவனங்களின் கிளைகளுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவிற்கும் கூட அதிகமாக அவுட்சோர்சிங் செய்யப்படும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shashi Tharoor says there are not enough engineering graduates and software professionals in the US


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->