கர்நாடகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: இந்துக்களை பிளவுபடுத்தும் முயற்சி - பாஜக கண்டனம்!
BJP condemn to Karntaka caste survey
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு அதிகாரப்பூர்வமானதல்ல என்றும், மதமாற்றத்துக்கு வழி வகுக்கிறது என்றும் மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா குற்றம் சாட்டினார். மாண்டியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதிகளை பிரித்து கணக்கெடுப்பதே சாதிவாரி கணக்கெடுப்பு என்றாலும், முதல்வர் சித்தராமையா இதை மதமாற்றம் ஊக்குவிக்கும் கருவியாக பயன்படுத்துகிறார் என்றார்.
வொக்காலிகா, தலித், விஸ்வகர்மா உள்ளிட்ட 52 சமூகங்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சி நடக்கிறது. கணக்கெடுப்பு முடிவுகளை அவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவோ குறைக்கவோ மாற்றம் செய்து காட்டுகின்றனர் என்றும் அசோகா குற்றம் சாட்டினார். கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களில் பல சமூகத்தினர் இருப்பினும், அவர்கள் வெளிப்படையாக கூறப்படவில்லை. ஹிந்து மதத்தில் அடக்குமுறை உள்ளது என சித்தராமையா கூறினாலும், பெண்கள் மசூதிக்குச் செல்ல முடியாததும், புர்கா கட்டாயம் போன்ற விதிமுறைகளும் அடக்குமுறையல்லவா என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கர்நாடகத்தில் அதிக எண்ணிக்கையில் லிங்காயத்துகள் வாழ்கின்றனர்; அடுத்து வொக்காலிகா சமூகமே பெரும்பான்மை. இந்த விகிதத்தை மாற்ற சித்தராமையா திட்டமிட்டுள்ளார். வொக்காலிகா சமூகத்தில் பிளவை ஏற்படுத்தி புதிய சாதி பிரிவுகளை உருவாக்க முயல்கிறார் என்றும் அசோகா தெரிவித்தார்.
English Summary
BJP condemn to Karntaka caste survey