திமுக பெண் நிர்வாகி கொலை - முகநூல் நேரலையில் தகவல் தெரிவித்த கணவர்.!!
dmk women excuetive murder in kerala
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம் புனலூர் அருகே உள்ள கலயநாடு பகுதியை சேர்ந்தவர்கள் ஐசக் மேத்யூ-ஷாலினி தாம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஷாலினி தி.மு.க. கொல்லம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்தார். இந்த நிலையில் தம்பதியினருக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் ஷாலினி கோபித்துக் கொண்டு தனது இரண்டு மகன்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் ஐசக் மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். மேலும், தனது மகன்களின் கண் முன்னே மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த ஐசக் அங்கிருந்து தப்பித்துச் சென்று முகநூலில் நேரலையில் ‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தையும், நகைகளையும் மனைவி ஷாலினி வீணடித்து விட்டார்.

எனக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தால், மனைவி தாய் வீட்டில் தங்கியிருந்து தனது மனம் போல் வாழ்ந்து வருகிறார். இப்படி வாழ தேவை இல்லை என்பதால் அவரை கொலை செய்து விட்டேன்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் காலை 9 மணியளவில் நேராக காவல் நிலையத்தில் சரணடைந்து மனைவியை வெட்டி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் ஷாலியின் பெற்றோர் வீட்டுக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐசக்கை கைது செய்தனர்.
English Summary
dmk women excuetive murder in kerala