விபத்தில் உயிரிழக்கும் கட்டடத் தொழிலாளருக்கு வழங்கும் உதவித்தொகை ரூ. 2 லட்சமாக உயர்வு.!
two lakhs increase of construction workers accident compensation
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளார் முகமது நசிமுத்தின் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் 5-ன்படி, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி செலுத்தும், தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், அவர்களுக்கு விபத்து மரண உதவித் தொகையாக வழங்கப்படும் ரூ.1,00,000/ -த்தை ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

இதை தமிழக அரசு மிக கவனத்துடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், அவர்களுக்கு வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1.00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
இதனால் ஏற்படும் செலவை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை வருகிற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அதாவது 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
two lakhs increase of construction workers accident compensation