அரியலூர் அருகே இருதரப்பு இடையே மோதல்.! பெண்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண்கள் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கோவில் சீமை எனும் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு வயது 38. அதே பகுதியை சேர்ந்த ஜோதி. இவருக்கு வயது 60. இவர்கள் இருவரும் விவசாயிகள் ஆவர்.

மணிகண்டனுக்கும், ஜோதிக்கும் இடையே குடும்ப தகராறு மற்றும் இட பிரச்சனை சம்பந்தமாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மணிகண்டன் ஜோதிடம் இடப் பிரச்சினை குறித்து விவாதம் செய்துள்ளார்.

அந்த நேரம் சம்பவ இடத்துக்கு மணிகண்டனின் உறவினர் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் வந்தனர். அதேபோல் ஜோதியின் உறவினர் மணிவாசகம், மணிகண்டன், செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும், தனித்தனியே ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

அதன்படி மணிகண்டன் மற்றும் அவருடைய உறவினர்கள் ராஜலட்சுமி, சுந்தராம்பாள், கனகராஜ் மீதும், ஜோதி மற்றும் ஜோதி அவருடைய உறவினர்கள் மணிவாசகம், மணிகண்டன், செல்வராஜ் ஆகிய 8 பேர் மீது விக்ரமங்கலம் காவல் நிலைய துணை கண்காணிப்பாளர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two families are fight in ariyalur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->