திருமாவளவன் அவர்களுக்கு அடிபணியமாட்டார்.. அவருக்கு..., வேல்முருகன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


திருமாவளவனுக்கு பாஜகவில் அமைச்சர் பதவி வழங்க கூட தயாராக இருக்கிறார்கள். சங்பரிவார் அமைப்பிடம் அவர் ஒருபோதும் அடிபணிய மாட்டார் என வேல்முருகன் எம்.எல்.ஏ பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரம் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் சமூக நீதி சங்கங்களின் ஒற்றுமை வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ பேசுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நல்ல தலைவரை பெற்றிருக்கிறார்கள். 

பொதுக்கூட்டம், மாநாடு, இலக்கிய கூட்டம் போன்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எப்படி பேச வேண்டும் என்று பேராசிரியர் போல திருமாவளவன் பேசி வருகிறார். அவரது பேச்சுக்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் உள்ள மக்களால் ஈர்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்காக திருமாவளவன் போராடுகிறார்.  

உலகின் பிரச்சனைகளை விரல் நுனியில் வைத்துக்கொண்டு பேசியக்கூடிய தலைவர் திருமாவளவன். அவரின் படம் அனைத்து இடங்களிலும் உள்ளது. திருமாவளவனுக்கு பாஜகவில் அமைச்சர் பதவி வழங்க கூட தயாராக இருக்கிறார்கள். சங்பரிவார் அமைப்பிடம் அவர் ஒருபோதும் அடிபணிய மாட்டார். அவருடன் சரி சமமாக விவாதம் செய்ய ஒரு அறிவு ஜீவி கூட பாஜகவில் இல்லை" என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Velmurugan MLA Speech at Cuddalore Chidambaram VCK Meeting about Thirumavalavan MP


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal