சேலம் சுங்கச்சாவடி சூறை.. த.வா.க கட்சியினர் அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


தலைவாசல் அருகே உள்ள சுங்கச்சாவடிகளில் நுழைந்த தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் கொடுக்க மறுத்து நள்ளிரவு நேரத்தில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியினர் வந்திருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி மாநாட்டினை நடத்தினர். 

நேற்று இரவு கட்சியின் மாநாடு முடிந்ததும் அக்கட்சியினர் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், சேலம் நத்தக்கரை பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு இவர்களின் வாகனத்தில் வந்துள்ளனர். இதன்போது, வாகனம் செல்ல சுங்கக் கட்டணம் வழங்க மறுப்பு தெரிவித்து, சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். 

இந்த சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரும் காயமடைந்த நிலையில், தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது தலைவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனைப்போன்று, சேலம் அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடிகளில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தகராறில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK Supporters Damaged Toll Plaza at Salem After Return Native His Part Meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal