இந்திய ராணுவத்திற்கு ஒரு சல்யூட் - தவெக தலைவர் விஜய்..!!
tvk leader vijay tweet about operation sindoor
காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்த அதிரடி தாக்குதலுக்கு பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய ராணுவத்திற்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்த பதிலடி தாக்குதலுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- 'இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் !' என்று தெரிவித்தார்.
English Summary
tvk leader vijay tweet about operation sindoor