சனாதனம் குறித்த சர்ச்சை பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு..!
The case against Udhayanidhi Stalin spoke controversially about Sanatana has been adjourned
சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும்' என பேசியிருந்தார் . உதயநிதியின் இந்த பேச்சு சர்ச்சையானது. இதனால் அவர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.
அதனை தொடர்ந்து தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் துணை முதல்-அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில்,மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு உச்சநீதிமன்றம் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்த விசாரணையை ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
The case against Udhayanidhi Stalin spoke controversially about Sanatana has been adjourned