பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் வீர மரணமடைந்துள்ளார்..!
An Indian soldier has died in the attack by the Pakistani army on the Poonch border
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 09 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு அரசு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லையில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
குறித்த தாக்குதலில் போது தினேஷ் குமார் என்ற ராணுவ வீர மரணமடைந்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு எல்லைப்பாதுகாப்புப்படையினர் மீண்டும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
An Indian soldier has died in the attack by the Pakistani army on the Poonch border