கருப்பு உருவம் துரத்தியதால் மடியில் இருந்து குதித்த மாணவி.. பகீர் வாக்குமூலம்.!
tuticorin school student trying to suicide
தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் பகுதியில் இருக்கின்ற தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வருகின்ற ஒரு மாணவி நேற்று விளையாடுகின்ற நேரத்தில் திடீரென பள்ளியின் முதல் தளத்தில் இருந்து திடீரென கீழே குதித்து இருக்கின்றார்.
இதில், அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்த நிலையில் அவர் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றி சாயர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் நேரில் வந்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது அந்த நிலையில், "கடந்த சில தினங்களாகவே ஒரு கறுப்பு உருவம் என்னை பின்தொடர்ந்து வருகின்றது. நான் மாடியில் இருந்து குதித்த தினத்தில் அந்த உருவம் என்னை மாடிக்கு அழைத்து சென்று குதித்து குதித்து விளையாட கூறியது." என தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன போலீசார் தற்கொலைக்கு முயர்சித்துள்ளதாகவழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியின் மன அழுத்தத்தைப் போக்குகின்ற வகையில் அந்த பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.
English Summary
tuticorin school student trying to suicide