சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்டவர் தந்தை பெரியார்- டிடிவி தினகரன் வாழ்த்து.!!
ttv dinakaran wish for periyar birthday
பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதியன்று சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
இவர் காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி 'யுனெஸ்கோ நிறுவனம்" பெரியாருக்கு 'புத்துலக தொலைநோக்காளர்", 'தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்", 'சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை" என பாராட்டி விருது வழங்கியது.
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி, பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் மற்றும் தந்தை பெரியார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில், பெரியாரின் பிறந்தநாளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில், திராவிடப் பேரியக்கத்தின் பிதாமகர், சமூக தீமைகளுக்கு எதிராக சமரசம் இல்லாமல் போராடிய தீர்க்கதரிசி, சாதி- மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
ttv dinakaran wish for periyar birthday