தஞ்சாவூர் பேருந்து விபத்து - டிடிவி இரங்கல்.. தமிழக அரசுக்கு கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வரகூர் பகுதியில், கல்லணையில் இருந்து மன்னார்குடிக்கு பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. வரகூர் அருகே இந்த பேருந்து வருகையில், எதிரே வந்த லாரிக்கு வழிவிட பேருந்து ஓரமாக சென்றுள்ளது. 

இதன்போது அப்பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், பள்ளத்தில் ஒருபுறமாக சரிந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த பேருந்து படியில் பயணம் செய்தவர், வெளியே தாழ்வாக சென்று கொண்டு இருந்த மின்சார கம்பியை பயத்தில் பிடித்துள்ளார். 

மின்சார கம்பியை பிடித்தவர் மற்றும் அவருடன் நெருக்கமாக பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இவர்களை ஒட்டி பயணம் செய்த 10 பேர் மூச்சு பேச்சு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட் பதிவு செய்துள்ளார். 

இது குறித்த ட்விட்டர் பதிவில், " தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே தனியார் பேருந்து மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் மரணமடைந்த சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன். இவ்விபத்தில் பலியானோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran Regret Thanjavur Bus Electric Shock Peoples Died


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->