முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி முதல்வர்... விசாரணையில் வெளிவந்த உண்மை...!
truth about college principal involved scam revealed during investigation
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் கால்நடை மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன.மேலும், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சென்னை, நாமக்கல், தேனி வீரபாண்டி, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை ஆகிய 7 இடங்களில் இருக்கிறது.

இதனிடையே, சென்னை வேப்பேரியில் இருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கல்லூரியில் ரூ.5 கோடி முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் 'சவுந்தரராஜன்' பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் பல்கலைக்கழகம்,முறைகேடுகள் குறித்து விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், முறைகேட்டில் சிக்கிய 5 அலுவலர்கள் வெவ்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதில் பணிநீக்கம் செய்யப்பட்ட சவுந்தரராஜனுக்கு பதிலாக புதிய முதல்வராக ''சதீஷ்'' நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செய்தி பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
truth about college principal involved scam revealed during investigation